உள்ளாட்சி, டாஸ்மாக்கில் பெரும் ஊழல் கவர்னரிடம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மனு| Dinamalar

உள்ளாட்சி, டாஸ்மாக்கில் பெரும் ஊழல் கவர்னரிடம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மனு

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை: ''உள்ளாட்சிகளில் விளம்பர பேனர் வைப்பதிலும், டாஸ்மாக் மதுபானம் விற்பனையிலும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேற்று மதியம் கவர்னர் ரவியை சந்தித்து, கோரிக்கை மனு
 உள்ளாட்சி, டாஸ்மாக்கில் பெரும் ஊழல் கவர்னரிடம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மனு

சென்னை: ''உள்ளாட்சிகளில் விளம்பர பேனர் வைப்பதிலும், டாஸ்மாக் மதுபானம் விற்பனையிலும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேற்று மதியம் கவர்னர் ரவியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். சந்திப்புக்கு பின், பழனிசாமி அளித்த பேட்டி:

தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, அன்றாட நிகழ்வாக உள்ளது. திறமையற்ற பொம்மை முதல்வர், தமிழகத்தை ஆள்வதால், இந்த நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன.

மத்திய உளவு ஏஜன்சி, மாநில அரசுக்கு எச்சரித்தும், தி.மு.க., அரசு, மாநில உளவுத்துறை, காவல் துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால், கடந்த மாதம் 23ம் தேதி, கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு நடந்தது; ஒருவர் இறந்தார். இதன் வாயிலாக, திறமையற்ற அரசு என்பதுநிரூபணமாகி உள்ளது.

அதேபோல, கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்காது. இதற்கு, தி.மு.க., அரசும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தையும், அரசால் தடுக்க முடியவில்லை.

தி.மு.க., ஆட்சி யில், அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' என்பது தான் திராவிட மாடல். மருந்து தட்டுப்பாட்டுக்கு அமைச்சர் தான் காரணம். மருந்து கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது.

உள்ளாட்சிகளில் முடிக்கப்பட்ட பணிகளை விளம்பரப்படுத்த பேனர் வைக்கின்றனர். அதன் விலை 350 ரூபாய். ஆனால், 7,906 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும் ஒரே நிறுவனத்துக்கு, இந்தப் பணி வழங்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சாலை அமைக்காமல் பணம் வழங்கப்பட்டுள்ளது.

தடையின்றி 24 மணி நேரமும், 'பார்' செயல்படுகிறது. கலால் வரி செலுத்தாமலேயே, ஆலையில் உற்பத்தியாகும் மதுபானங்களை எடுத்து வந்து பார்களில் விற்கின்றனர்.

இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. இதையெல்லாம் விசாரிக்கும்படி, கவர்னரிடம் கேட்டு உள்ளோம்.

'ஆன்லைன்' ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரினோம். தி.மு.க.,வுக்கு ஜால்ரா போட்டால், நல்ல கவர்னர் என்பர். தவறை சுட்டிக்காட்டினால் மோசம் என்பர். கவர்னரின் செயல்பாடு நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X