அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
தங்கவயல்--''அரசு நல திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர அதிகாரிகள் சேவை செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார்.மாரிகுப்பம் பகுதியில் உள்ள நகராட்சியின் 9வது செல்லப்பா வார்டு, 10வது சின்னக் கண்ணு வார்டுகளில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.தொகுதி காங்கிரஸ்
 அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தல்



தங்கவயல்--''அரசு நல திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர அதிகாரிகள் சேவை செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார்.

மாரிகுப்பம் பகுதியில் உள்ள நகராட்சியின் 9வது செல்லப்பா வார்டு, 10வது சின்னக் கண்ணு வார்டுகளில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசுகையில், ''தங்கவயல் நீதிமன்றம் அருகில் மினி விதான் சவுதா கட்டடத்தில் அனைத்து அலுவலகங்களும் அமைந்துள்ளன. 60 வயது முடிந்த முதியோருக்கு பென்ஷன் வழங்கப்படும்.

''இதற்காக, யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உணவுத் துறை அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகலாம்.

''அரசு நல திட்டங்கள் மக்களுக்கு வந்து சேரஅதிகாரிகள் சேவை செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

''இங்குள்ள பலரும் பி.பி.எல்., கார்டுகள் வைத்திருப்போராக உள்ளதால், 75 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு சலுகைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதிகாரிகள் அதற்குரிய சேவைகளை செய்ய வேண்டும்,'' என்றனர்.

நகராட்சி தலைவர் முனிசாமி பேசுகையில், ''தங்கவயலில் கொரோனா பாதிப்பால் அபிவிருத்தி பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆயினும் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா முயற்சியால் பல பணிகள் நடந்துள்ளது.

''தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை காண வராமல் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருவதே கடமை. தங்கவயலில் தொழிற் பூங்கா அமைக்க போராடி வருகிறார், '' என்றார்.

அனைத்து துறைகளின் அதிகாரிகளும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கி பேசினர்.

உணவுத் துறை அதிகாரி ரகு: 1 வயது குழந்தைக்கும் கூட ரேஷன் வழங்கப்படுகிறது. அவர்களின் பெயரை கார்டுகளில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் தேவை.

திருமணம் ஆன பின் புகுந்த வீட்டில் சேரும் மணப்பெண், தாய் வீட்டு முகவரியில் உள்ள ரேஷன் கார்டில் இருக்கும் பெயரை நீக்கம் செய்து, புகுந்த வீடான கணவர் குடும்ப ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம்.

இரண்டு இடத்தில் பெயர் இருக்க முடியாது. புதிய ரேஷன் கார்டுகள் தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். உணவு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து பரிசீலித்த பின் கார்டுகள் வழங்கப்படும்.

மின் துறை துணைப் பொறியாளர் ஹேமலதா: ஆதார் கார்டு இருந்தாலே மின் இணைப்பு வழங்கப்படும். 75 யூனிட் இலவச மின்சாரம் தேவைப் படுவோருக்கு பி.பி.எல்., ரேஷன் கார்டு தேவை. அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

ஆணையர் மாதவி, துணைத் தலைவர் தேவி, நகராட்சியின் 9, 10வது வார்டுகளின் நகராட்சி உறுப்பினர்கள் சாந்தி, சசிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X