2025 முழுதும் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெங்களூரு,-''சத்ய சாய்பாபா பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை, 2025ம் ஆண்டு முழுதும் கொண்டாடுவோம்,'' என, மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய்பாபா 97வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெண்ணிற ஆடை அணிந்து கடல் போல்
 2025 முழுதும் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு



பெங்களூரு,-''சத்ய சாய்பாபா பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை, 2025ம் ஆண்டு முழுதும் கொண்டாடுவோம்,'' என, மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய்பாபா 97வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெண்ணிற ஆடை அணிந்து கடல் போல் காட்சி அளித்தனர். நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


சாய்பாபா பக்தன்



குல்வந்த் அரங்கில் நேற்று காலை நடந்த விழாவில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

நான், மத்திய அமைச்சராக இங்கு வரவில்லை. பகவான் சத்ய சாய்பாபாவின் பக்தனாக வந்துள்ளேன். ஹிந்து மதத்தை கட்டி காத்த சத்ய சாய்பாபா, ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தி, சமூக, பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார்.

அவர் வகுத்து தந்த வழியில் தான், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் செயல்படுகிறது.

முன்னாள் துணை பிரதமர் அத்வானியுடன் சாய்பாபா பிறந்தநாள் விழாவிற்கு ஏற்கனவே வந்துள்ளேன்.

ஏழைகளின் கஷ்டத்தை நீக்கி, அதை தீர்த்து வைத்த தந்தையாக பகவான் விளங்கினார். புட்டபர்த்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீருக்கு தவித்த போது, கிருஷ்ணா நதிநீரை வரவழைத்த பெருமை பகவானையே சாரும்.


அற்புத பணி



இது ஒரு பெரிய அற்புதப் பணி. அரசு செய்ய வேண்டிய பணியை அவர் செய்து காட்டினார். யாருமே நினைத்து பார்க்க முடியாத சாதனையை பகவான் நிகழ்த்தினார்.

ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு என்றே தனி மருத்துவமனை அமைத்தார். இங்கு, 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இன்னும் லட்சக்கணக்கான ஏழைகள் பலவிதமான சிகிச்சைகள் பெற்று நலமுடன் வாழ்கின்றனர்.

இவரது சுகாதார சேவையை பார்த்து தான் ஆந்திரா, தெலுங்கானாவில் ஆரோக்கிய ஸ்ரீ என்ற சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது. சத்ய சாய்பாபா என்றால் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய வெளிச்சம், தன்னம்பிக்கை, தைரியம், கடவுள், பக்தி, தந்தை, சாந்தி, உணவளித்த மகான்.

இவ்வுலகில் சூரியன், சந்திரன் இருக்கும் வரை, பகவான் சத்திய சாய்பாபாவின் புகழ் நிலைத்து நிற்கும்.

அவரது நுாற்றாண்டு பிறந்தநாள் விழா, 2025ம் ஆண்டு முழுதும் கோலாகலமாக கொண்டாடுவோம். நாம் அனைவரும் அவர் வகுத்துக் கொடுத்த வழியை கடைப்பிடித்து, சேவை மனப்பான்மையுடன் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


4.10 லட்சம் மாணவர்கள்



தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழாவையொட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. உயர்நிலை, இடைநிலை, கல்லுாரி என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், 4.10 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

விழாவில், கட்டுரைப் போட்டியில் வென்ற 23 மாணவ - மாணவியருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஆறு மாணவியரும் பதக்கம் பெற்றனர்.

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவுக்காக, 2025 வரை நாடு முழுதும் 1 கோடி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, புட்டபர்த்தியில் நேற்று துவக்கி வைத்தார்.


பிருந்தாவனம் அலங்கரிப்பு



சத்ய சாய்பாபாவின் பிருந்தாவனம் வண்ண வண்ண மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பக்தர்கள், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய சுவாமி படங்களை பிருந்தாவனத்தில் சமர்ப்பித்தனர். நேற்று முன்தினம் முதலே லட்சக்கணக்கான பக்தர்கள், பிரசாந்தி நிலையத்தில் குவிந்தனர். அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவ - மாணவியரின் இசை நிகழ்ச்சி, சத்ய சாய்பாபாவின் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. இறுதியில், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று மாலை ஊஞ்சல் சேவையும், தேரோட்டமும் நடந்தன.

சத்ய சாய்பாபா மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் உட்பட அறங்காவலர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X