சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த, 2,200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், நகர்ப்புறங்களில், பாதாள சாக்கடை திட்டங்கள், குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளையும், 2016 - 17ம் ஆண்டுக்கு பின் மேம்படுத்தாமல், பழுதடைந்துள்ள சாலைகளையும் மேம்படுத்த, 2,200

சென்னை:தமிழகம் முழுதும் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த, 2,200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், நகர்ப்புறங்களில், பாதாள சாக்கடை திட்டங்கள், குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இந்த சாலைகளையும், 2016 - 17ம் ஆண்டுக்கு பின் மேம்படுத்தாமல், பழுதடைந்துள்ள சாலைகளையும் மேம்படுத்த, 2,200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என, முதல்வர் கடந்த அக்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, ஆண்டுக்கு, 550 கோடி ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, 2,200 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.

இந்த நிதியுடன், இதர திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து, 9,588 கோடி ரூபாயில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, 20 ஆயிரத்து 990 கி.மீ., சாலைகளை மேம்படுத்த, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

முதற்கட்டமாக, 2023ம் ஆண்டில், 5,140 கோடி ரூபாயில், 12 ஆயிரத்து 61 கி.மீ., நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். மீதமுள்ள சாலைகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில்மேம்படுத்தப்படும்.

சாலைகள் அமைக்க, ஒருங்கிணைப்பு அமைப்பாக, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நியமிக்கப்பட்டு உள்ளது. தரமான சாலைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், இந்நிறுவனத்தால் இறுதி செய்யப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X