ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் பக்தர்கள் புனித நீராடல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:திருவிசநல்லுார், ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், கார்த்திகை அமாவாசை தினமான நேற்று, கங்கை பொங்கி வரும் ஐதீகம் கொண்ட கிணற்றில், ஏராளமானோர் புனித நீராடினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருவிசநல்லுாரில், 300 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீதர அய்யாவாள் என்பவர், கார்த்திகை அமாவாசை தினத்தில், அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு செய்து இருந்தார்.அப்போது, பசியால்
 ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் பக்தர்கள் புனித நீராடல்

தஞ்சாவூர்:திருவிசநல்லுார், ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், கார்த்திகை அமாவாசை தினமான நேற்று, கங்கை பொங்கி வரும் ஐதீகம் கொண்ட கிணற்றில், ஏராளமானோர் புனித நீராடினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருவிசநல்லுாரில், 300 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீதர அய்யாவாள் என்பவர், கார்த்திகை அமாவாசை தினத்தில், அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு செய்து இருந்தார்.

அப்போது, பசியால் துடித்த ஏழைக்கு, திதிக்காக ஏற்பாடு செய்த உணவை அய்யாவாள் வழங்கினார். திதி கொடுக்க வந்த சாஸ்திரிகள் கோபம் அடைந்தனர்.

'திதி கொடுக்கும் முன்பே, அதற்காக தயாரித்த உணவை, ஏழைக்கு அளித்து விட்டதால் தோஷம் ஏற்பட்டு விட்டது. கங்கை நதியில் நீராடி வந்த பின்னரே, திதி கொடுக்க இயலும்' எனக் கூறி, திதி கொடுக்காமல் சென்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அய்யாவாள் திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என்ற வருத்தத்தில், கங்காஷ்டகம் என்ற ஸ்தோஸ்திரத்தை வாசித்துள்ளார். உடனே, அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக பொங்கியது.

அந்த நீர், ஊரை சூழ்ந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திகை அமாவாசை தினமான நேற்று, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் ஏராளமானோர் அதிகாலை முதல் காவிரி ஆற்றில் நீராடி, அய்யாவாள் மடத்தில் உள்ள விசேஷ கிணற்றில் புனித நீராடினர்.

ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் விக்ரகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதற்கு விசேஷ பூஜைகளும் நடந்தது. இன்று ஸ்ரீதர அய்யாவாளின் திருவீதியுலா, ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

படம் உண்டு...

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X