மே.வங்க கவர்னர் பதவியேற்பு விழா புறக்கணித்த பா.ஜ., மூத்த தலைவர்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கோல்கட்டா, மேற்கு வங்க கவர்னராக ஆனந்த போஸ் பதவியேற்ற நிகழ்ச்சியை, பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி புறக்கணித்தார். ''பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மலிவான அரசியல் செய்கிறார்,'' என, அவர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி
 மே.வங்க கவர்னர் பதவியேற்பு விழா புறக்கணித்த பா.ஜ., மூத்த தலைவர்



கோல்கட்டா, மேற்கு வங்க கவர்னராக ஆனந்த போஸ் பதவியேற்ற நிகழ்ச்சியை, பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி புறக்கணித்தார்.

''பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மலிவான அரசியல் செய்கிறார்,'' என, அவர் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் புதிய கவர்னராக ஆனந்த போஸ் நேற்று பதவியேற்றார்.

கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த விழா நடந்தது.

பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மேற்கு வங்க சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் நான். மாநிலத்தின் கவர்னர் பதவியேற்கும் விழாவில் எனக்கு இருக்கை ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் அளிக்க வில்லை.

மக்கள் பிரதிநிதியான எனக்கு, மேற்கு வங்க அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை. விழாவில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்க வேண்டும், யார் பங்கேற்க வேண்டும் என்பதை மம்தா தான் முடிவு செய்துள்ளார்.

அவர் ஒரு மலிவான அரசியல்வாதி. என்னை அவமதித்தது, மேற்கு வங்க மக்களை அவமதித்ததற்கு சமம். இதனால் தான் அந்த விழாவை புறக்கணித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X