தென் மாவட்டத்திற்கு 'வந்தே பாரத்' ரயில்?

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு வரும், 'வந்தே பாரத்' ரயிலுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே

சென்னை:தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு வரும், 'வந்தே பாரத்' ரயிலுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஐ.சி.எப்., ஆலையில் ஆறாவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது; வரும் டிச., 15க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த புதிய ரயில் சேவை, எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என, பயணியர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதுகுறித்து, பயணியர் கூறுகையில், 'ஆறாவது வந்தே பாரத் ரயிலையாவது, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும்' என்றனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் முக்கியமான வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில் படிப்படியாக இயக்கப்படும். ஆறாவது வந்தே பாரத் ரயிலை, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம். எந்த வழித்தடத்தில் இயக்குவது என, வாரியம்தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X