ஜாகிருக்கு அழைப்பு விடுக்கவில்லை: மத்திய அரசுக்கு கத்தார் பதில்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி :'கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட துவக்க விழாவில் பங்கேற்க, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கவில்லை' என, கத்தார் அரசு தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மதபோதகரான ஜாகிர் நாயக், 'பீஸ் டிவி' மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்து
ஜாகிர்,  அழைப்பு ,மத்திய அரசு , கத்தார் பதில்


புதுடில்லி :'கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட துவக்க விழாவில் பங்கேற்க, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கவில்லை' என, கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மதபோதகரான ஜாகிர் நாயக், 'பீஸ் டிவி' மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார்.


latest tamil newsஇத்துடன், முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியது உள்ளிட்ட காரணங்களால், இவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 2016ல் மத்திய அரசு தடை விதித்தது.

சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை, 2021ல் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியா வில் இருந்து தப்பி சென்ற ஜாகிர் நாயக் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் அரசு ஆதரவுடன் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் உலகப் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 21ல் துவங்கின. துவக்க விழாவில் ஜாகிர் நாயக் பங்கேற்றார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

'கத்தாரின் இந்த செயலால், உலக கோப்பை போட்டியை காண, இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கத்தார் செல்லஇருந்ததை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுஉள்ளது' என அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு கத்தார் அளித்து உள்ள பதில் அறிக்கை:

உலகக் கோப்பை போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க, ஜாகிர் நாயக்குக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா - கத்தார் நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்தில் சில மூன்றாம் நாடுகள் செயல்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202214:39:45 IST Report Abuse
ஆரூர் ரங் நாங்க அழைப்பு விடுக்கவில்லை ஆனால் தானாகவே வந்தால் தடுக்க மாட்டோம்😇😇. இப்படிக்கு கத்தார்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
24-நவ-202211:50:12 IST Report Abuse
சீனி அடுத்த ஒசாமா பின்லாடன் இவன் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் ஆப்கானிஸ்தான் சென்று, தாலிபன்களின் ஆலோசர்கரா மாறுவது சிறப்பு தரும். இல்லை இருக்கவே இருக்கு பாக்கிஸ்தான், ஆனா இங்கே தீவிரவாதிக்களுக்குள்ளேயே பலத்த போட்டியிருக்காம். ஹபீஸ் சையித் மண்டைய போட்டப்புறம் ஜாகீருக்கு வாய்ப்புகிடைக்கும். அதுவரை மோடியை எதிர்த்து பின் மகாதிர் முகமது ஆட்சியே தொங்கு பாராளமன்றமாகிவிட்ட மலேசியாவில் குப்பை கொட்ட வேண்டியது தான். இந்தியவுக்கும் அரபு நாடுகளுக்கும் பிரச்சனை செய்ய உற்பத்தி செய்யப்பட்ட அமெரிக்க உளவு ஏஜெண்டா கூட ஜாகீர் இருக்கலாம். காலம் தான் பதில் சொல்லும்.
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
24-நவ-202211:18:31 IST Report Abuse
raja இந்தியாவிற்கு வரும் காலங்களில் ஜனநாயகம் மற்றும் மதங்கள் இரண்டும் இந்தியாவை துண்டு துண்டாக கூறுபோடும் அதுவும் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நடக்கும் கூத்துக்கள், மக்களிடம் சில மதங்கள் மட்டுமே சிறந்தவை என்று கருத்தை திணிக்கின்றனர் சில தீவிரவாதிகள் தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் திராவிட கொள்ளையர்கள் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை அரபு நாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர் அதை மறைப்பதற்காக ஹிந்துக்களை கொச்சையாகவும் அதன் வாழ்வியல் முறைகளையும் ஏளனம் செய்கின்றனர்... இதையெல்லாம் மத்திய அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இந்தியா என்ற நாடு இருப்பது கடினமே.... அரபு நாடுகள் எப்போதும் இந்தியாவிற்கு முழு மனதோடு ஆதரவு கொடுக்காது ஏனென்றால் அவர்களுக்கு நாட்டைவிட்டு மதமே பெரியது ஏன் என்னுடன் பணிபுரியும் முஸ்லீம் நண்பர்கள் அவர்களிடம் பேசும்போது கூட அவர்கள் சொல்வது இந்தியா என்ற தேசத்தை விட எங்களுடைய மதமே பெரியது, முக்கியம் என்றுதான் வாதிடுகின்றனர்....இந்தியாவில் உள்ள முஸ்லீம் பெரும்பாலானோர் அவர்கள் மதமே பெரியது என்பார்கள் அவர்கள் எப்போதும் மற்ற மதங்களை இழிவாகவே நினைக்கின்றனர் ... இது என் அனுபவத்தில் கிடைத்ததை பகிர்ந்துள்ளேன். இதற்கும் என்னை வறுத்தெடுக்க வேண்டும் என்றால் உங்களுடைய அறியாமை இல்லையென்றால் உங்களுடைய மதவெறி அதை என்னால் புரியவைக்க முடியாது...
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-நவ-202216:06:29 IST Report Abuse
Rafi முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவாக பேசினால் இஸ்லாத்தை விளங்கி கொள்ளவில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும், குரானில் அத்தியாயம் 109, வாக்கியம் 4 இல் தெளிவாக அல்லாஹ் கூறுகின்றான் அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கே என்று தெளிவுபடுத்தியுள்ளான். அவரவர் மதம் என்பது அவரவர்களின் வாழ்க்கை முறை, தேசம், மாநிலமும் , ஊர், வீடு என்பது அவரவர்களின் உரிமை சார்ந்தது, இரண்டையும் இணைத்து குழம்பி கொள்ள கூடாது. இதோ இந்த தளத்தில் கூட சாதாரண கருத்து தெரிவித்தால் கூட காட்டேரி, தீவிரவாதி, மூர்க்கன் என்று வசை பாடுவதை மேலும் எவனாவது ஒருவன் தவறு செய்தால் ஒட்டுமொத்த மதமும் அப்படிதான் என்பதும் சர்வ சாதாரணம்மாக காணலாம், இஸ்லாமியர்கள் மாற்று மதத்தவர்களை வேறு ஏதேனும் துணை பெயரில் அழைத்தது பதிவாகியுள்ளதா? உங்கள் மன சாட்சிக்கே விடுகின்றேன். இந்துக்களில் பலர் மதத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு கூட இஸ்லாத்தை இழுத்து கொச்சையாக பதிவிடுவதும் சாமானியன் ஆகிவிட்டது. இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட அடக்க ஸ்தலத்தில் கட்டடம் கட்டி இறந்த அவருக்கு ஏதோ சக்தி இருப்பது போல் வழிபடும் முறைகள் ஏற்பட்டு நாகூர், ஏர்வாடி என்று பல இடங்களில் கூத்து நடக்கின்றது, அதையே இப்போதுதான் இஸ்லாத்தின் மொழிமாற்றம் கையில் கிடைத்த பிறகு அவைகள் இஸ்லாத்தில் இல்லாதது என்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்பட்டு, மக்கள் சிந்திக்க துவங்கி இருக்கின்றார்கள். இதில் அடுத்த மதத்தை பற்றிய கருத்தில் மூக்கை நுழைப்பது அநாகரிகம். என்னுடைய கருத்தில் நண்பா, தோழா என்றே தான் குறிப்பிடுகின்றேன். நன்றி தோழா...
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
24-நவ-202219:43:34 IST Report Abuse
MARUTHU PANDIARஅதெல்லாம் இப்படி அங்கலாய்ப்பதாக காட்டுவது கிடக்கட்டும் தம்பி++++இப்படி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் உடுறத்துக்குப் பதில் யாரும் பயனறவாதத்தைக் கண்டிக்கறதில்லயே?,,உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் அடிப்படை வாத அட்டுழியம், வெடி குண்டு அராஜகம் அன்றாடம் நடந்துக்கிட்டே இருக்கே ...இதெல்லாம் செய்யறது யாரு? ஊர்ல அத்தன பேருக்கும்,, அதான் உம் சமூக ஆட்களுக்கு முன்னாடியே தெரியும்ங்கறாங்களே-இந்த பயங்கரவாத வெறியை கண்டிச்சு வெளிப்படையா அறிக்கை விடுறதோ , கருத்து சொல்வதோ நூத்தில ஒரு ஆளு கூட உம்ம ஆளு இல்லையே? அதுனால வேற எப்படி நினைப்பாங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X