ஈரோடு:ஈரோட்டில், தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தை, மேயர் அறையில் நடத்தியிருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
லோக்சபா தேர்தல் 2024ல் வருவதையொட்டி, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் அறையை ஒட்டி மற்றொரு அறை உள்ளது. அதில், கொல்லம்பாளையம் பகுதி, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது.
இந்நிலையில், மாலையில், கோட்டை பகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், மேயர் அறையிலேயே நடந்தது.
மேயர் நாகரத்தினத்தின் கணவரும், மாநகர தி.மு.க., செயலருமான சுப்பிரமணியத்தின் தலைமையில் இக்கூட்டங்கள் நடந்தன.
இது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.