அலுவலகங்களுக்கு உபகரணம் வழங்க 'ஸ்டோர்'களில் தாமதம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்களை, பிரிவு அலுவலகங்களுக்கு வழங்க, மின் வாரியத்தின், 'ஸ்டோர்' எனப்படும் கிடங்குகளில் பணிபுரிவோர், தாமதம் செய்வதாக புகார் எழுந்து உள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு, 44 மின் பகிர்மான வட்டங்கள் உள்ளன. இரண்டு, மூன்று வட்டங்களுக்கு, தலா ஒன்று என, ஸ்டோர்கள் உள்ளன. அவற்றில், மின் கம்பி, மீட்டர், கேபிள் உள்ளிட்ட

சென்னை:புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்களை, பிரிவு அலுவலகங்களுக்கு வழங்க, மின் வாரியத்தின், 'ஸ்டோர்' எனப்படும் கிடங்குகளில் பணிபுரிவோர், தாமதம் செய்வதாக புகார் எழுந்து உள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, 44 மின் பகிர்மான வட்டங்கள் உள்ளன. இரண்டு, மூன்று வட்டங்களுக்கு, தலா ஒன்று என, ஸ்டோர்கள் உள்ளன. அவற்றில், மின் கம்பி, மீட்டர், கேபிள் உள்ளிட்ட மின் வினியோகத்திற்கு தேவையான உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

மின் இணைப்பு வழங்குதல், பழுதை சரிசெய்தல் போன்ற பணிகளுக்கான உபகரணங்களை, உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் வாயிலாக, ஸ்டோர்களில் இருந்து பெறுவர்.

வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும், புதிய மின் இணைப்புக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, துரித கதியில் மின் இணைப்பு வழங்குமாறு, உதவி பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், ஸ்டோர்களில் பணிபுரிவோர், உபகரணங்களை வழங்க தாமதம் செய்வதாக புகார் எழுந்துஉள்ளது.

இதுகுறித்து, உதவி பொறியாளர்கள் கூறியதாவது:

புதிய மின் இணைப்புகளில் பொருத்த மீட்டர் கேட்டால், ஸ்டோர்களில் பணிபுரிவோர் பணம் கேட்கின்றனர். தர மறுத்தால் மீட்டர் இருந்தாலும், 'ஸ்டாக் இல்லை' என்கின்றனர்.

இதேபோல், மின் கம்பி, கேபிள் என, முக்கியமான உபகரணங்களை வழங்க தாமதம் செய்கின்றனர். இதனால், மின் இணைப்பு வழங்கும் பணியிலும் தாமதமாகிறது.

எனவே, ஸ்டோர்களில் இருந்து விரைவாக உபகரணங்கள் கிடைக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X