மதுரை -- செங்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகள் தாமதம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
விருதுநகர்:மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இவ்வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட
 மதுரை -- செங்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகள் தாமதம்

விருதுநகர்:மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இவ்வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருமங்கலத்தில் இருந்து குன்னத்தூர், டி.கல்லுப்பட்டி, அழகாபுரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இவ்வழித்தடத்தில் நகரங்களின் மையப்பகுதி வழியாகவே, தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பல இடங்களில் அதிக வளைவுகள் உள்ளது. இந்த வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரள மக்களும் கோரிக்கை எழுப்பினர்.

இதனையடுத்து மத்திய அரசு நிலம் கையகப்படுத்த ஒப்புதல் அளித்தது. திருமங்கலம், பேரையூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்-1, ராஜபாளையம்--2, சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை தாலுகாக்களில் நிலம் எடுப்பு சிறப்பு தாசில்தார் அலுவலகம் அமைக்கப்பட்டு, 2019ல் செயல்பட துவங்கியது.

முதலில் 60 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டது. விவசாய நிலங்கள், மரங்கள், கிணறுகள் அதிகம் பாதிக்கப்படும் என விவசாயிகளின் எதிர்ப்பு தெரிவித்ததால் 45 மீட்டர் அகலத்தில் அமைக்க நிலங்கள் கண்டறியப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரம் 2021 மே மாதம் அதிகாரப்பூர்வ அரசாணை யில் வெளியிடப்பட்டது.


மந்தநிலையில் பணிகள்தாசில்தார் தலைமையிலான குழுவினர் நான்கு வழிச்சாலை அமையும் இடங்களில் எல்லை கற்களை நட்டனர். தற்போது நிலத்திற்குரியவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

2022ம் ஆண்டிற்குள் நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பணிகள் மந்த நிலையிலேயே நடக்கின்றன. அழகாபுரி, கிருஷ்ணன்கோவில், அச்சங்குளம், பாட்டக்குளம், பூவாணி, மீனாட்சிபுரம். கடம்பன்குளம் பகுதியில் புதர் மண்டி கிடக்கும் நிலங்களை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் மற்ற பகுதிகளில் இப்பணிகள் கூட துவங்கப்படவில்லை. இதனால் பணிகள் முடிய பெரும் தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மத்திய, மாநில அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தங்கள் பணிகளை விரைவு படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பக்தர்கள் வழித்தடம்


இவ்வழித்தடத்தில் மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், தென்காசி காசி விஸ்வநாதர், செங்கோட்டை திருமலைக்கோயில், அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஐயப்பன் கோயில், புனலூர் கிருஷ்ணன், கொட்டாரக்கரை கணபதி கோயில் என ஏராளமான கோயில்களும், குற்றாலம், பாலருவி, தென்மலை சுற்றுலா தலங்களும் உள்ளன. மேலும் கார்த்திகை முதல் தேதி துவங்கி தை 5 தேதிகள் வரை, ஒவ்வொரு தமிழ் மாதமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் இவ்வழியாக பயணிக்கின்றன.விரைவில் பணிகள் துவங்கும்


அமையவுள்ள நான்கு வழிச்சாலை வழித்தடம்


இப்போது மதுரை -- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எந்த நகரத்திலும் பைபாஸ் சாலை கிடையாது. புதிய நான்கு வழிச்சாலையில் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னுத்துாரில் இருந்து பைபாஸ் சாலை துவங்குகிறது. டி.கல்லுப்பட்டியை கடந்து டி.சுப்புலாபுரத்தில் தற்போதைய சாலையில் இணைகிறது. கிருஷ்ணன்கோவில் வரை தற்போதைய சாலை அகலப்படுத்தப்படுகிறது.


கிருஷ்ணன்கோவில் மின்வாரிய துணை மின் நிலையம் அருகில் இருந்து பிரிந்து பாட்டக்குளம், விழுப்பனூர், அச்சன்குளம், கடம்பன்குளம், தைலாகுளம், அத்திகுளம் செங்குளம், தெய்வேந்திரி, அயன் நாச்சியார் கோவில், அச்சம்தவிழ்த்தான், பிள்ளையார்குளம், மேல வரகுண ராமபுரம், சமுசிகாபுரம், முதுகுடி, தெற்கு வெங்காநல்லூர், கொல்லங்கொண்டான், இளந்திரைகொண்டான், புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம், விஸ்வநாதபேரி வழியாக பை-பாஸ் அமைக்கப்பட்டு சிவகிரியில் தற்போதைய தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இதன் மூலம் டி.கல்லுப்பட்டி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளை பை-பாஸ் சாலை மூலம் கடந்து செல்ல முடியும்.


நில எடுப்பிற்கான பணம் வழங்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. புற்களை அகற்றி மண்ணை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இது முடிந்ததும் விரைவில் பணிகள் துவங்கும்.

நாகராஜ், திட்டமேலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X