போலி கல்விச்சான்று தந்து பணி இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'

Added : நவ 24, 2022 | |
Advertisement
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலி கல்வி சான்று கொடுத்து இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்த நெப்போலியன் 52, மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர். தற்போது தஞ்சாவூரில் பணியாற்றும் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தஞ்சாவூர் மருதம் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நெப்போலியன். இவர் சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் (சி.எம்.சி.,) டிப்ளமோ லேப் டெக்னீசியன் முடித்ததாக

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலி கல்வி சான்று கொடுத்து இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்த நெப்போலியன் 52, மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர். தற்போது தஞ்சாவூரில் பணியாற்றும் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மருதம் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நெப்போலியன். இவர் சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் (சி.எம்.சி.,) டிப்ளமோ லேப் டெக்னீசியன் முடித்ததாக கல்வி சான்றுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 2017 மே 15ல் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் அவரது கல்வி சான்றின் உண்மை தன்மையை அறிய மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பவில்லை.

அவர் இங்கு 2019 வரை இ.சி.ஜி., பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். அதற்கு பின்னும் சான்றிதழ் ஆராயாமல் பணி தொடர 'புரபேஷன்' தகுதி வழங்கியுள்ளனர். நெப்போலியன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றம் பெற்று சென்றார்.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வில் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகம், நெப்போலியனின் கல்வி சான்று போலி என உறுதி அளித்தது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனை இளநிலை உதவியாளர் சுரேஷ்குமார், சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். தஞ்சாவூர் நெப்போலியன் மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து நெப்போலியன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சென்னை அரசு மருத்துவக்கல்லுாரியின் பெயரில் போலி சான்று தயாரித்து வழங்கியது யார், சிவகங்கையில் அவரின் கல்வி சான்றின் உண்மை தன்மை அறியாமல் 'புரபேஷன்' வழங்கிய அதிகாரிகள் மீது தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X