ராமேஸ்வரம்:இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் தவித்த அகதிகள் 10 பேர் அங்கிருந்து படகு கூலியாக
ரூ. 3.60 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்தனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகள் படகில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வருவது தொடர்கிறது. இந்நிலையில் இலங்கை வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்தவர் உதயசூரியன் 47, மனைவி பரிமளாதேவி 44, மகன்கள் தீமுத் 23, டிலோசன் 17, ஜோயர் 12, ரீகன் 17, மற்றும் புவனேஸ்வரி 44, இவரது மகன் விபூஷன் 10, மகள் சதுர்சா 4, மற்றும் நியான்சன்20, ஆகிய 10 பேர் அகதியாக மன்னார் கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் வடக்கு கடற்கரையில் வந்திறங்கினர். இதற்கு படகு கூலியாக ரூ. 3.60 லட்சம், முக்கால் பவுன் தங்கத்தோடு பெற்று கொண்ட இலங்கை படகோட்டிகள் அகதிகளை இறக்கி விட்டதும் நாட்டிற்கு திரும்பி சென்றனர். இந்த விபரங்களை தெரிவித்த அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரித்து மண்டப முகாமில் தங்க வைத்தனர்.