ராஜிவ் தியாகம் சீமானுக்கு தெரியாது!

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (84) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த கொலைகாரர்களில் நான்கு பேர், இலங்கையை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது; அவர்களை நாடு கடத்த
Rajiv Gandhi,Rajiv,Seeman,ராஜீவ், சீமான், இலங்கை, நளினி, சோனியா, கொலை, விடுதலை,


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்



என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த கொலைகாரர்களில் நான்கு பேர், இலங்கையை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது; அவர்களை நாடு கடத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஆனால், சீமான் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு, இது கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

'ராஜிவ் என்ன பெரிய தியாகியா? சோனியா வெளிநாட்டை சேர்ந்தவர் தானே? அவரையும் நாடு கடத்த வேண்டியது தானே?' என்று உளறிக் கொட்டி இருக்கிறார் சீமான். இதைக் கேட்கும் போது, ராஜிவை கொன்றவர்களை மன்னித்த, சோனியாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. சோனியா, வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், முறைப்படி குடியுரிமை பெற்றவர்.

ராஜிவ் என்ன பெரிய தியாகியா என்று கேட்கும் சீமான், விடுதலை புலிகள் தலைவராக இருந்த, மறைந்த பிரபாகரன் செய்த தியாகங்களை பட்டியலிட தயாரா? ராஜிவை மட்டும் விடுதலை புலிகள் கொடூரமாகக் கொலை செய்ய வில்லை. ஈழத்தை சேர்ந்த தமிழர்களின் உரிமைக்காக அறவழியில் போராட்டம் நடத்திய பத்மநாபாவையும், அமிர்தலிங்கத்தையும் கொன்றனர்.


latest tamil news



ராஜிவ், பத்மநாபா, அமிர்தலிங்கம் மரணத்திற்கு பரிகாரமாக, பிரபாகரன் குடும்பத்தை கூண்டோடு அழித்து பரிகாரம் தேடிக் கொண்டது, இலங்கை ராணுவம்.

'கத்தி எடுத்தவன், கத்தியால் சாவான்' என்ற பழமொழி, பிரபாகரன் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. நேரு, இந்திரா, ராஜிவ் போன்றோர், இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள், சீமான் போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

சீமான் போன்ற வெத்து வேட்டுக்கள் என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை தியாகிகளாக, குற்றமற்றவர்களாக காட்ட முயற்சித்தாலும், தமிழக மக்களின் கண்களுக்கு, அவர்கள் என்றும் கொடூர கொலைக்காரர்களாகவே தெரிவர்; அவர்களை என்றுமே மனதளவில் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaba Jaba -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202223:16:18 IST Report Abuse
Jaba Jaba 0
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
24-நவ-202221:58:45 IST Report Abuse
M S RAGHUNATHAN கேள்வி என்னவென்றால் ராஜிவ் மேல்.வெறுப்பு இருந்திருந்தால் தனியாக அவர் மேல் தாக்குதல்.நடத்தி இருக்க வேண்டும். வேறு 16 பேர் கொலை செய்யப் பட்டார்களே அவர்கள் சாவுக்கு காரணமானவர்கள் தானே.இந்த 7 பேரும். அவர்களுக்கு சீமான் என்ன செய்து இருக்கிறார். இவர் ஒரு கோமாளி.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-நவ-202220:22:31 IST Report Abuse
M  Ramachandran ஆமைக்கறி என்ற பெயர் எப்படி வந்தது? சீமானைய (சைமன் ) பற்றி கேட்க வேண்டுமென்றால் விஜயலக்ஷ்மி இடம் விவரம் இருக்கிறது படம் கிடையக்காவில்லைய என்றதும் அரசியல் வியாபாரத்தில் மூலதனமில்லாமல் ஆரம்பித்து வெளி ஊர்களுக்கு செல்லும்போது பைவ் ஸ்டார் ரூம் ஏஆர் போராடவில்லைஎன்றும் சீரும் அரசியல் வாதியாக உரு பெற்று விட்டார். ஊரன் நெய்யெ ஏன் பொங்டாட்டிகைய்யே .அதற்கும் ஒரு கூட்டம் . சத்தம்போட்டு .ஆ ஊ என்று குரலாய் உயர்த்தி ட்ராமா டைலாக் குடுத்து மகளாய் உசுபி மூலைஎய் மளுங்க செய்வது . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X