தி.மு.க., இளைஞரணி செயலராக மீண்டும் உதயநிதி! ஒரு அமைச்சர், 2 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தி.மு.க., இளைஞரணி செயலராக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அமைச்சர் மகேஷ், எம்.எல்.ஏ.,க்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர் மற்றும் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரிடம் இருந்த, மாநில துணை செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2019ல் உதய நிதிக்கு, தி.மு.க., இளைஞரணி செயலர் பதவி வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி

சென்னை:தி.மு.க., இளைஞரணி செயலராக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமைச்சர் மகேஷ், எம்.எல்.ஏ.,க்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர் மற்றும் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரிடம் இருந்த, மாநில துணை செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019ல் உதய நிதிக்கு, தி.மு.க., இளைஞரணி செயலர் பதவி வழங்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சி அமையும் முன், எம்.எல்.ஏ.,க்களாக இருந்த மகேஷ், ஆர்.டி.சேகர், தாயகம் கவி; அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி, வழக்கறிஞர்கள் அசன் முகமது ஜின்னா, ஜோயல், துரை ஆகியோருக்கு, மாநில இளைஞரணி துணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மகேஷுக்கு கல்வி அமைச்சர் பதவி, திருச்சி மாவட்ட செயலர் பதவி; அசன் முகமது ஜின்னாவுக்கு தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பதவியும் வழங்கப்பட்டது.

எனவே, அவர்கள் இருவரும், இளைஞரணி துணை செயலர் பதவியில் இருந்து, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள ஆர்.டி.சேகர், தாயகம் கவி ஆகியோருக்கு, 50 வயதுக்கு மேலாகி விட்டதால் அவர்களின் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

பைந்தமிழ் பாரிக்கு தற்போது பதவி வழங்கப்படவில்லை. கட்சி தலைமையை விமர்சித்ததால், துரை ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், இளைஞரணி மாநில செயலராக, மீண்டும் உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இளைஞரணி துணைச் செயலர்களாக ஜோயல், ரகுபதி என்கிற இன்பா, இளையராஜா, அப்துல்மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், ரானா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை, தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டோரில், ஜோயல் மட்டும் பழைய முகம். மற்றவர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களாக பதவி வகித்தவர்கள். அவர்களுக்கு பதவி உயர்வாக, மாநில துணைச் செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

புதிய நிர்வாகிகள் நியமனத்தில், வாரிசுகளுக்கு இடம் தராமல், முழுக்க முழுக்க, இளைஞரணியில் பணியாற்றியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளதால் இளைஞர் அணியினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X