நடராஜர் கோவில் கதவின் பூட்டு உடைப்பு வாலிபரிடம் போலீசார் விசாரணை

Added : நவ 24, 2022 | |
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிரச்னைக்குரிய தெற்கு வாயில் கதவின் பூட்டை வாலிபர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கணக்கு வழக்கு ஆய்வு, சித்சபையில் பக்தர்கள் ஏற அரசாணை, தீட்சிதர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு, கைது படலம் என, அரசின்
 நடராஜர் கோவில் கதவின் பூட்டு உடைப்பு வாலிபரிடம் போலீசார் விசாரணை



சிதம்பரம்-சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிரச்னைக்குரிய தெற்கு வாயில் கதவின் பூட்டை வாலிபர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கணக்கு வழக்கு ஆய்வு, சித்சபையில் பக்தர்கள் ஏற அரசாணை, தீட்சிதர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு, கைது படலம் என, அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால், சமீபகாலமாக கோவிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும், இக்கோவிலுக்குள் நந்தனார், தெற்கு வாயில் வழியாக வந்ததாகவும், அதை திறக்க கோரிய பிரச்னையும் உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 7:30மணியளவில், கோவிலுக்கு வந்த வாலிபர் ஒருவர், அடைக்கப்பட்டுள்ள தெற்கு வாயிலின் உள்புறமாக உள்ள பெரிய கேட்டில் இருந்த இரண்டு பூட்டுகளை, கம்பியால் உடைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தீட்சிதர்கள், அந்த வாலிபரை தடுக்க சென்றபோது கம்பியை காட்டி மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து, சிதம்பரம் நகர போலீசுக்கு தீட்சிதர்கள் தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சென்று அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர், சிதம்பரம் கனகசபை நகரை சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்த், 29, என்பது தெரியவந்தது. அந்த வாலிபர் எதற்காக கதவின் பூட்டை உடைத்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X