தி.மு.க., மகளிரணி செயலராக ஹெலன் டேவிட்சன் நியமனம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தி.மு.க.,வில் கனிமொழிக்கு, துணை பொதுச்செயலர் பதவி தரப்பட்டதால், அவர் வகித்த மகளிர் அணி செயலர் பதவி, முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.தி.மு.க.,வில் இளைஞரணி போல, மகளிர் அணி முக்கியத்துவம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. உட்கட்சி தேர்தலுக்கு பின் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், துணை பொதுச் செயலராக கனிமொழி தேர்வானார். இதையடுத்து, அவர் வகித்த

சென்னை:தி.மு.க.,வில் கனிமொழிக்கு, துணை பொதுச்செயலர் பதவி தரப்பட்டதால், அவர் வகித்த மகளிர் அணி செயலர் பதவி, முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தி.மு.க.,வில் இளைஞரணி போல, மகளிர் அணி முக்கியத்துவம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. உட்கட்சி தேர்தலுக்கு பின் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், துணை பொதுச் செயலராக கனிமொழி தேர்வானார்.

இதையடுத்து, அவர் வகித்த மாநில செயலர் பதவி கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், இணை செயலராக குமரி விஜயகுமார், துணை செயலர்களாக முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் அணி, சமூக வலைதள பொறுப்பாளர்களாக டாக்டர் யாழினி, ரத்னா லோகேஸ்வரன், திருநங்கை ரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகளிர் அணியில் பல்வேறு பிரிவுகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மூத்த முன்னோடிகளை புறக்கணிக்கக் கூடாது என்பதாலும், அவர்களின் ஆலோசனையும், அறிவுரையும் மகளிர் அணிக்கு தேவை என்பதால், வயதானோருக்கும் மகளிர் அணியில் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

கனிமொழி பரிந்துரையின் அடிப்படையில் தயாரித்த புதிய பட்டியலை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X