பா.ஜ.,வில் அதிரடி தொடரும்: அண்ணாமலை

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:''கட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும்; கட்சியின் ஒழுக்கத்தில் லட்சுமண ரேகையை தாண்டும் யாரையும் விடப் போவதில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில், 'டீ பாய்' நிறுவனத்தின், 200வது டீ கடையை திறந்து வைத்த பின், அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் மத்தியில், 400 எம்.பி.,க்களுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். அதில், 25 பேர்

சென்னை:''கட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும்; கட்சியின் ஒழுக்கத்தில் லட்சுமண ரேகையை தாண்டும் யாரையும் விடப் போவதில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை, தேனாம்பேட்டையில், 'டீ பாய்' நிறுவனத்தின், 200வது டீ கடையை திறந்து வைத்த பின், அவர் அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலில் மத்தியில், 400 எம்.பி.,க்களுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். அதில், 25 பேர் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது கட்சி தலைமை எனக்கு கொடுத்த பணி. அனைத்து பகுதிகளிலும் கட்சியை வளர்த்து வருகிறோம்.

கட்சியில் உள்ள இரு நபர்கள், தொலைபேசியில் கருத்து வேறுபாடுகளை பகிர்ந்துள்ளனர். இருவரிடமும் நாளை திருப்பூரில் விசாரணை நடக்கிறது. மாலையே எனக்கு விசாரணை அறிக்கை கிடைக்கும்.

தவறு யார் செய்திருந்தாலும் விடப் போவதில்லை; தனிப்பட்ட காரணம் என்றும் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது, ஆரம்பம் தான். இன்னும் பத்து நாட்கள் பொறுக்கவும். கட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.

கட்சியின் ஒழுக்கத்தில், லட்சுமண ரேகையை யார் தாண்டுகின்றனரோ, அவர்கள் யாரையும் விடப் போவதில்லை. இல்லையேல், கட்சி அடுத்த கட்டத்திற்கு போகாது.

இரும்புப் பிடியில் கட்சியை வைத்திருக்க யாராவது நினைத்தால், என் பதவி காலத்தில் நான் அனுமதிக்க போவதில்லை.

'ஆன்லைன் ரம்மி' தடை சட்டத்திற்கு பா.ஜ., முழு ஒப்புதல் அளிக்கும். அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.,வின் வளர்ச்சி, அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

ஒரு பஸ்சில் நான்கு பேர் இறங்கினால் தான், மற்றவர்கள் ஏற முடியும். கட்சியில் இருப்பவர்கள் சரியான நபரா, முழு தகுதி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

'நான் பஸ்சில் முதலில் ஏறி விட்டேன்; நான் தான் 25 ஆண்டுகள் அந்த சீட்டில் அமருவேன்' என்பதை எப்படி ஏற்க முடியும்? புதியவர்களும் பஸ்சில் ஏற வேண்டும்.

அவர்களுக்கு பழையவர்களை விட அதிக திறமை இருக்கலாம். கட்சி வளர வேண்டும் என்றால் புதியவர்கள் கட்சிக்கு வர வேண்டும்.

நான்கு பேரை மட்டும் வைத்து கட்சியை வளர்க்க முடியாது. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்திலும் யாரெல்லாம் தடை கற்களாக இருக்கின்றனரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X