நர்சிங் மாணவி கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்த நர்சிங் மாணவி செல்வியை கழுத்தறுத்து கொலை செய்த தங்கராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வத்திராயிருப்பு தாலுகா முத்துக்குமாரசாமிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 28; டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி 20, நர்சிங்

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்த நர்சிங் மாணவி செல்வியை கழுத்தறுத்து கொலை செய்த தங்கராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வத்திராயிருப்பு தாலுகா முத்துக்குமாரசாமிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 28; டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி 20, நர்சிங் படித்தவர். இருவரும் அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள். இருவரும் காதலித்ததால் அவர்களை பெற்றோர் கண்டித்தனர். இதில் ஏற்பட்ட பிரச்னையில் 2017 ஏப்.11 அன்று மதியம் செல்வியை, ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தறுத்து தங்கராஜ் கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் தங்கராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X