2 கோடி கிலோ யூரியா கூடுதலாக ஒதுக்கீடு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தின் தேவை கருதி, 2 கோடி கிலோ யூரியாவை, மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கி உள்ளது.தமிழக டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் நெல் மட்டுமின்றி சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியும் களைகட்டி வருகிறது.சமீபத்தில், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் கனமழை

சென்னை:தமிழகத்தின் தேவை கருதி, 2 கோடி கிலோ யூரியாவை, மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கி உள்ளது.

தமிழக டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் நெல் மட்டுமின்றி சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியும் களைகட்டி வருகிறது.

சமீபத்தில், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால், பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

அவற்றை காப்பாற்ற, யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், உர தேவை அதிகரித்து உள்ளது.

நடப்பு மாதத்தில் வழக்கமாக, 1.46 லட்சம் டன்கள் உரம் தேவைப்படும்.

பயன்பாடு அதிகரிப்பால், 2 கோடி கிலோ யூரியா கூடுதலாக வழங்கும்படி, வேளாண்துறை வாயிலாக, மத்திய உர அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 2 கோடி கிலோ யூரியாவை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

ரஷ்யாவில் இருந்து துாத்துக்குடி துறைமுகம் வந்துள்ள யூரியா, பேக்கிங் செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X