புதுச்சேரி-காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி இறந்த ராணு வீரர்களுக்கு, புதுச்சேரியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீர்- பாகிஸ்தான் எல்லையில் பனிச்சரிவில் சிக்கி புதையுண்டு மூன்று ராணுவ வீரர்கள் இறந்தனர்.
இவர்களுக்கு, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் நேற்று முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.