பழநி:பழநி மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்க கோபுர தகடுகள் துாய்மைப்படுத்தப்பட்டன.
பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளுக்காக சிலைகள், கோபுரங்கள், கட்டடங்கள் சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதனிடையே மூலஸ்தானத்தின் மீதுள்ள தங்க தகடுகள் பதித்த கோபுரத்தில் உள்ள தகடுகளை பணியாளர்கள் துாய்மைப்படுத்தினர்.
நகை சரிபார்ப்பு அதிகாரி கிருஷ்ணன், நகை சரிபார்ப்பு வல்லுனர்கள் செல்ல பாண்டியன், ராஜேஷ்வரன் முன்னிலையில் இப்பணி நடந்தது. விரைவில் இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.