மக்கள் அவதி
காட்டுக்குப்பம், பாக்கியலட்சுமி நகர், சி.எம்.ஏ., நகர், சப்தகிரி நகர் பகுதிகளில் தார் சாலை, கழிவுநீர் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
தீபா பழனி, காட்டுக்குப்பம்.
விபத்து அபாயம்
கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில், சாலையின் இருபுறமும் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வினோபா சுரேஷ்குமார், பிள்ளையார்குப்பம்.
தெரு விளக்கு எரியுமா
மணலிப்பட்டு மேம்பாலத்தில் தெருவிளக்குகள் எரியாததால் அந்த இடம் இரவில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கார்த்திக், மணலிப்பட்டு.
வாகன ஓட்டிகள் அவதி
நெல்லித்தோப்பு சிக்னல் - புதிய பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சக்திவேல், நெல்லித்தோப்பு.
புதுச்சேரி, நவ. 24-
கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக பக்கவாத தின நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, துணை சுகாதார செவிலியர் தனலட்சுமி வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவ அதிகாரி (பொறுப்பு) சித்ரா, பக்கவாதம் வந்தால் வேகமாக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும், அதற்கான அறிகுறிகள், விளைவுகள், தடுக்கும் வழிமுறைகளை விளக்கினார்.
ஓமியோபதி டாக்டர் அருணாச்சலம், பக்கவாதம் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள், தினசரி உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி பற்றி கூறினார்.
சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.