புதுச்சேரி-கலிதீர்த்தாள்குப்பம் எம்.ஐ.டி., கல்லுாரியில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி பொறியியல் கல்லுாரி அடல் தொழில் அபிவிருத்தி மைய தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன், தொழில் முனைவு, அதில் புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம் பற்றி கூறினார்.
மேலும், புதிய தலைமுறையில் இந்தியா, தமிழக அளவில் வென்ற தொழில் முனைவோர்கள் குறித்தும், மாணவர்கள் தங்களின் புதிய யோசனை, கண்டுபிடிப்பு மூலம் சிறந்த தொழில் முனைவோராவது பற்றி விளக்கினார்.
ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் எக்ஸார் ரோபோயிக்ஸ் நிறுவனர் அருணன், கார்க்கி மொபிலிட்டி சர்வீசஸ் நிறுவனர் அப்துல்லா, முதலீட்டாளர் பத்ரி நாராயணன் ஆகியோர், சுயதொழிலில் உள்ள சவால்கள், அவர்களின் தொழில்முறை அனுபவம் பற்றி கலந்துரையாடினர்.
கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன், டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன் ஆகியோர் அந்தந்த துறை செயல்பாடுகள் பற்றி கூறினர்.
இதில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மைய இன்குபேஷன் மேலாளர் காமேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார்.