சென்னை:வனத்துறையில் அனுமதி, தடையின்மை சான்று உள்ளிட்ட விண்ணப்பங்கள் குறித்த குறைகளை கேட்டறியும் கூட்டம், ஆன்லைன் வாயிலாக, டிச., 5ல் நடத்தப்பட உள்ளது.
வனப்பகுதிகளில் பாதையை பயன்படுத்த அனுமதி, மரங்கள் வெட்ட அனுமதி, கட்டுமான பணிகளுக்கான தடையின்மை சான்று போன்ற விஷயங்களுக்காக மக்கள் விண்ணப்பிக்கின்றனர்.
இந்த விண்ணப்பங்கள் நிலவரம், இதன் மீதான நடவடிக்கை தொடர்பான குறைகளை தெரிவிக்க, மாதம் ஒரு முறை ஆன்லைன் வாயிலாக குறை தீர்வு கூட்டத்தை வனத்துறை நடத்துகிறது. இந்த வகையில், டிச., 5 பிற்பகல், 3:00 மணிக்கு நடத்தப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர், இதற்கான விண்ணப்பங்கள், விபரங்களை, openhouseforest@gmail.com என்ற, 'இ -மெயில்' முகவரிக்கு, டிச., 1 பிற்பகல், 3:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என, வனத்துறை அறிவித்துஉள்ளது.