புதுச்சேரி-மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு காரணமாக வரும் 26ம் தேதி புதுச்சேரி வடக்கு நகர பகுதிகளில் 2 மணி நேரம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பொதுப்பணி துறை, பொது சுகாதார கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, வடக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வரும் 26ம் தேதி பகல் 12.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, புதுச்சேரி வடக்கு நகர பகுதியான, நேரு வீதி, அண்ணா சாலை, சர்தார் வல்லபாய்பட்டேல் சாலை, கடற்கரை சாலை, வாழைகுளம், சின்னயாபுரம், குருசுகுப்பம், ராமகிருஷ்ணா நகர், திருவள்ளுவர் நகர், அப்துல்கலாம் நகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.