திருநெல்வேலி:திருநெல்வேலி காந்திமதிநகரை சேர்ந்தவர் மஞ்சு 20. மகாராஜநகரில் ஆடிட்டிங் படிக்கிறார். நேற்று மதியம் 2:00 மணியளவில் திருநெல்வேலி ஆற்றுப் பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். அதே பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் அவரை உடனடியாக காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். கால்கள் முறிந்த நிலையில் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.