வடமதுரை : அய்யலுார் அருகே மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டியில் இதுநாள் வரை நின்று சென்று கொண்டிருந்த திண்டுக்கல் திருச்சி அரசு, தனியார் விரைவு பஸ்கள் தற்போது சரிவர நிற்பதில்லை.
இதனால் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பரிதவிக்கின்றனர். இதற்காக நவ.17ல் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
போலீசார் சமரசம் செய்ய போராட்டத்தை கைவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக தங்கம்மாபட்டியில் நேற்று அமைதி கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன், பேரூராட்சி தலைவர் கருப்பன், அரசு, தனியார் பஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள், சுற்று கிராம மக்கள் பங்கேற்றனர்.
இதில் திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பது என்றும், நிற்காமல் செல்லும் பஸ் எண்களை குறிப்பிட்டு புகார் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.