புதுச்சேரி-புதுச்சேரி வர்த்த சபையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.
வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன், தொழிலாளர் நல அதிகாரி கண்ணபிரான், வர்த்தக சபையின் துணைத்தலைவர் ரவி, பொதுச்செயலாளர் ஆனந்தன், இணைச்செயலாளர் முகமது சிராஜ், குழு உறுப்பினர்கள் ஞானசம்பந்தம், குமார், உறுப்பினர் ராஜா தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு வரும் உரிமையாளர்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் குறித்து வர்த்தகசபை தலைவர் குணசேகரன் விடுத்துள்ள அறிக்கை:
நிறுவனங்களின் உரிமையாளர்கள், வியாபாரிகள் புதிதாக பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க அசல் ஆவணங்கள் கொண்டு வர வேண்டும். உரிமையாளரின் அடையாளச் சான்று, நிறுவனத்தின் முகப்பு புகைப்படம் (பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்), நிறுவனத்தின் சட்டப்பூர்வ பயன்பாட்டிற்கான ஆதாரம், தொழிலாளர்களின் முழு விபரங்களை கொண்டு வர வேண்டும்.
நாளை 25ம் தேதிவரை நடக்கும் இந்த சிறப்பு முகாமினை உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.