ராகுல் நடைபயணத்தால் எந்த பலனும் இல்லை! பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங் கருத்து

Added : நவ 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி:''காங்., கட்சியின் செல்வாக்கு, தேசிய அளவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது,'' என பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங் கூறினார்.இதுகுறித்து அவர் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:தேசிய அளவில் காங்., கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வெற்றி பெறும்; குஜராத்தில் காங்.,
 ராகுல் நடைபயணத்தால்  எந்த பலனும் இல்லை! பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங் கருத்து

புதுச்சேரி:''காங்., கட்சியின் செல்வாக்கு, தேசிய அளவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது,'' என பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:

தேசிய அளவில் காங்., கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வெற்றி பெறும்; குஜராத்தில் காங்., முழுமையாக தோல்வியைத் தழுவும்.

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமராவார். ராகுல் நடைபயணத்தால் எந்தப் பலனும் இல்லை.

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையிலும், காசி முதல் ராமேஸ்வரம் வரையிலும் நாடு ஒன்றுபட்டே உள்ளது.

ராகுல் நடைபயணம் மேற்கொண்டு, தேசத்தை இணைக்கும் அவசியமில்லை. அவர் காலை, மாலை என, சாதாரண நடைபயிற்சியை போலவே நடைபயணம் செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X