சென்னை:'அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியின் இரட்டை நாக்கை, தமிழக மக்களும் புரிந்து கொள்வர்' என, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கவர்னரை சந்தித்த பின், பழனிசாமி நிருபர்களிடம், 'தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது; தங்கள் ஆட்சியில் தடையின்றி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டது' என்றார்.
தற்போதுள்ள அரசை குற்றம் சொல்வதற்கு, தாங்கள் தகுதியானவர்கள் தானா என, சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். மருத்துவமும், கல்வியும் இரு கண்களாக கருதும், தற்போதுள்ள அரசின் மீது குற்றம் சாட்டுவது, எந்த வகையிலும் ஏற்க முடியாது.
அரசியல் செய்ய, தாங்கள் செய்த தவறை மறைத்து, மற்றவர்கள் மேல் பழிபோடுவது அநாகரிகம்.
பொதுக் கணக்குழுவில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கும் இந்த உண்மை புரியும்.
பழனிசாமியின் இரட்டை நாக்கை, தமிழக மக்களும் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
* தினமலர் பையன்டயலாக்:
ஆளுங்கட்சியை குறை சொன்னால், தி.மு.க.,வினரை விட
காங்கிரசாருக்கு தான் 'சுள்'ளுன்னு கோபம் வருதே!