ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் தங்கத்தேரில் சிக்கி தெலுங்கானா பெண் பக்தர் காயமடைந்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் தங்கத்தேர் புதுப்பித்து சமீபத்தில் இழுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கத்தேர் தினமும் கோயில் 3ம் பிரகாரத்தில் இழுக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை இழுக்க கோயிலில் சீர்பாதம் தாங்கி ஊழியர்களை பயன்படுத்தாமல் நேற்றிரவு கோயில் ஊழியர்கள் இழுத்த போது தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர்களும் இழுத்து வந்தனர். அப்போது தேரின் சக்கரம் தெலுங்கானா ராஜகங்காராம் மனைவி ராஜமணி60, இடது காலில் ஏறி இறங்கியதில், அவர் விரல்கள் நசுங்கி பலத்த காயமடைந்தார்.கோயில் மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கோயில் அதிகாரிகள் அலட்சியத்தால் அப்பாவி பெண் பக்தர் காயமடைந்த சம்பவத்திற்கு அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.