மதுரை : மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் அடிப்படை வசதிகளை செய்யக்கூடாது என்ற ரீதியில் பயனாளி ஒருவரிடம் மதுரை அனுப்பானடி பகலவன் நகரில் 42 வதுவார்டு தி.மு.க., கவுன்சிலர் செல்வியிவ் கணவர் கார்மேகம் மிரட்டும் ஆடியோ வைரலானது.
இதேபோல் தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டுகளில் மத்திய அரசின் திட்டப்பயனாளிகளை மிரட்டுவதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று மதுரை முனிச்சாலையில் தி.மு.க., கவுன்சிலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர்கள் அருண்பாண்டி, ஜனார்த்தனன் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பேசினார்.