காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறையினர் கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது நீர்வளத் துறையினர் ஏரிகள் வேகமாக நிரம்புகிறது.
ஆனால், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றேரிகள் நிரம்புவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.
அந்த வகையில், நீர்வளத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், நேற்றைய கணக்கெடுப்பின்படி, 101 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது.
ஆனால், ஊரக வளர்ச்சித் துறை சிற்றேரிகள் 380ல், வெறும் 27 மட்டுமே முழுதுமாக நிரம்பியுள்ளன. 25 ஏரிகள் 75 சதவீதமும், 159 ஏரிகள் 50 சதவீதமும், 140 ஏரிகள் 25 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. மேலும், ஏரிகள் பல பராமரிப்பின்றி இருப்பதன் காரணத்தாலும், ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது.