கூடலுார் : குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அழகர்சாமி 39. குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, இரண்டு குழந்தைகளை விட்டு 5 ஆண்டுகளாக பிரிந்து வாடகை வீட்டில் தந்தையுடன் வசித்தார்.
நவ. 19 ல் இருந்து இவரை காணவில்லை என இவரது தந்தை கூடலுார் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இவரை தேடி வந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement