தாண்டிக்குடி : தாண்டிக்குடி மண்டல காப்பி ஆராய்ச்சி நிலையத்தில் காபி விவசாயிகள் கருத்தரங்கு நடந்தது. இந்திய காபி வாரிய இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். காபி விரிவாக்க துணை இயக்குனர் கருத்தமணி, காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் தங்கராஜ், வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன், விஞ்ஞானிகள் சவுந்தர்ராஜன், ரேவதி களப்பணியாளர் கணேஷ் கலந்து கொண்டனர்.
காபி வாரிய இயக்குனர் செந்தில்குமார் பேசுகையில், '' தற்போது விலை உயர்வும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இதற்காக 5 காபி வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயற்கை முறையில் விளையும் காபிக்கு மதிப்புள்ளதால் விவசாயிகள் இந்நடைமுறையை கடைபிடிக்கலாம்,'' என்றார்.
விவசாயிகள் தரப்பில், காபிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் காபிக்கு சான்றிதழ் பெறுவது சிரமமாக உள்ளது. இதை காபி ஆராய்ச்சி நிலையம் மூலம் எளிதில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை முறையில் விளையும் காபி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கருத்து தெரிவித்தனர்.