புதுச்சேரி-புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலாசார ஒருங்கிணைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இதில், 16 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்று பாட்டு, நடனம் போட்டிகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதற்கான பரிசளிப்பு விழாவிற்கு, பள்ளி முதல்வர் தினகரன் நல்லாமல்லா தலைமை தாங்கினார். துணை முதல்வர் கலவாதி வரவேற்றார். தொடக்க கல்வி துணை இயக்குநர் பூபதி சிறப்புரையாற்றி பாட்டு, நடனம் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசளித்தார்.
நிகழ்ச்சியை, தமிழ் விரிவுரையாளர் மணிமொழி தொகுத்து வழங்கினார்.
கணித விரிவுரையாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.