சென்னை:நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.