சென்னை:சென்னைநந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடிகர் ஆர்.கே., எனும் ராதாகிருஷ்ணன், 63.சில நாட்களுக்கு முன், இவரது மனைவி ராஜி வீட்டில் தனியாக இருந்தபோது, மூன்று பேர், கத்திமுனையில் மிரட்டி கட்டிப்போட்டு, 200 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
விசாரணையில், ராதாகிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தன் நண்பர்களுடன் கொள்ளையடித்தது தெரிந்தது.
கொள்ளையர்கள் நேபாளத்தில் சிக்கியதாகவும், அவர்களை சென்னை அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. போலீசார் இந்த தகவலை உறுதி செய்ய மறுக்கின்றனர்.