சென்னை:சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாளாளர் மீது கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் 'போக்சோ' உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத் 38.
இவர் 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை -- திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதட்டமான சூழல் ஏற்பட்டது.
மாலை 3:00 மணியளவில் வினோத் மீது 'போக்சோ' சட்டம் கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது வினோத் கோவாவில் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement