முதுகுளத்தூர் : -முதுகுளத்துார் அருகே மேலச்செல்வனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு 32. பாகிஸ்தானில் நடக்கும் மாற்றுத்திறனாளிக்கான ஆசிய கோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு டிச. 21ல் நடக்கும் போட்டியில் விளையாட உள்ளார். வினோத் பாபு வாடகை வீட்டில் மின்சார வசதியின்றி சிரமப்பட்டு வருகிறார்.
தற்போது பாகிஸ்தான் செல்ல பண வசதி இல்லாமல் சிரமமாக உள்ளது. அரசு உதவ வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் நவ. 21ல் மனு அளித்தார். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் வினோத்பாபுவுக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் தலைமையில் நிதி உதவி வழங்கப்பட்டது. உடன் அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன், ரஞ்சித் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் இருந்தனர்.