கூடலுார் :தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேரை குமுளி சோதனைச் சாவடியில் கேரளா கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சபரிமலை சீசன் மும்முரமாகியுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகன போக்குவரத்து அதிகம். இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போதைப் பொருள் கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியான குமுளியில் கேரள கலால்துறை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஜோசப், தடுப்பு அதிகாரிகள் சதீஷ்குமார், ஜோசி வர்கீஸ், அருண், ஸ்டெல்லா ஆகியோர் தலைமையில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த காரில் சோதனை செய்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் 40, டிட்டோ சந்தனா 26, மிதுலா 26, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement