காரைக்கால்--புத்தாண்டில் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டி இசைக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் கலெக்டரிடம் இசைக் கலைஞர்கள் அளித்துள்ள மனு:
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டில் கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனால், இசைக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, வரும் புத்தாண்டில் இசை நிகழ்ச்சி நடத்தவும், அதில், உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.