தேவகோட்டை : தேவகோட்டை இளங்குடி கிராம அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து செல்லும் பாதையில் செப்டிக் டேங்க் கட்ட சிமென்ட் உறைகளை பதிக்கும் பணியை சிலர் செய்தனர்.
சம்பந்தப்பட்ட இடத்தில் எதுவும் பணி செய்யக் கூடாது என சர்வேயர், வி.ஏ.ஓ., தெரிவித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் செப்டிக் டேங்க் பணியை செய்தனர்.
இதனை தடுத்த கிராமத்தினரை சிலர் மிரட்டி உள்ளனர். கிராமத்தினர் ஆர்.டி.ஓ., , டி.எஸ்.பி., அலுவலங்களில் புகார் செய்து முற்றுகையிட்டனர். திருவேகம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.