திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம்,நகர் என எங்கும் பெரும்பாலான ரோடுகள் சிதைந்து பள்ளங்களாக காட்சிளிக்கின்றன. வாகனங்கள் துள்ளிகுதித்து விளையாடுவது போன்று சென்று வருகின்றன. சில நேரங்களில் விபத்துக்களும் அரங்கேறுகின்றன. டூவீலர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இரண்டு மூன்று முறை பயணித்தாலே வாகனங்களும் பழுதாகின்றன. மழை நேரத்தில் நீர் தேங்கி பள்ளங்கள் தெரியாமல் போகிறது. இதுவும் விபத்துக்கு வழிவகுக்கிறது. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ரோடுகளை புதுப்பிக்க வேண்டிய நிலையில் பல ஆண்டுகளாக சேதமுற்ற ரோடுகள் பல சீரமைக்கப்படாமல் பயணிப்போரை பயமுறுத்துகிறது.