திண்டுக்கல் : திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி வீட்டை நெட்டு தெருவை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் நெட்டு தெருவில் உள்ள துாய்மை பணியாளர்கள் வீடுகள் மழைநேரத்தில் சேதமாகி இடியும் நிலையில் உள்ளது.
இதை இடித்து புதிய வீடு கட்டி தருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துாய்மை பணியாளர்கள் பட்டா கோரி குடும்பத்தோடுநேற்று இரவு கோவிந்தாபுரத்தில் உள்ள கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.
அமைச்சர் இல்லாத நிலையில் அவரின் உதவியாளர்கள் விசாரித்தனர். டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்த கலைந்தனர்.
துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: நெட்டு தெரு பகுதியில் 900குடும்பங்கள் வசிக்கிறோம். மாநகராட்சி சார்பில் எங்களது வீடுகளை இடிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
எங்களுக்கு இதில் விருப்பமில்லை. நாங்களே வீட்டை இடித்து சீரமைத்து கொள்கிறோம். அதற்தான பட்டா வழங்க வேண்டும், என்றனர்.