மதுரை : மதுரை கே.கே.நகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர். நேற்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக ஓ.பி.சி., பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா ஆகியோர் மீது மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: சூர்யா பா.ஜ., சிறுபான்மை அணி தலைவி டாக்டர் டெய்சி சரணை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை. அண்ணாமலையின் செயல் தெரிந்தே குற்றத்தை மறைக்கும் குற்றச்செயல். முன்னாள் போலீஸ் அதிகாரியான அவருக்கு சட்டம் தெரிந்திருந்தும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 202-ன் கீழ் குற்றம் இழைத்துள்ளார். எனவே அண்ணாமலை, சூர்யா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.