ராகுல் யாத்திரைக்கு மிரட்டல் சச்சின் பைலட் விளக்கம்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஜெய்ப்பூர் :ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு, ராஜஸ்தானைச் சேர்ந்த குர்ஜார் சமூக அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ''ராகுலின் யாத்திரை வெற்றி பெறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அந்த கட்சியின் எம்.பி.,யுமான ராகுல், நாடு தழுவிய அளவில் ஒற்றுமை யாத்திரை என்ற நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.ராஜஸ்தானில்
ராகுல் யாத்திரை , மிரட்டல், சச்சின் ,பைலட் விளக்கம்

ஜெய்ப்பூர் :ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு, ராஜஸ்தானைச் சேர்ந்த குர்ஜார் சமூக அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ''ராகுலின் யாத்திரை வெற்றி பெறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அந்த கட்சியின் எம்.பி.,யுமான ராகுல், நாடு தழுவிய அளவில் ஒற்றுமை யாத்திரை என்ற நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.ராஜஸ்தானில் செல்வாக்கான குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் விஜய்சிங் பைன்ஸ்லா சமீபத்தில் கூறியதாவது:ராஜஸ்தானில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சச்சின் பைலட் தான் முதல்வராகியிருக்க வேண்டும்.


latest tamil news



ஆனால், அசோக் கெலாட் முதல்வராக்கப்பட்டார். இது, குர்ஜார் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட துரோகம். தற்போது கூட சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர கெலாட் மறுக்கிறார்.

இதை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி தராவிட்டால், ராகுலின் ஒற்றுமை யாத்திரையை ராஜஸ்தானுக்குள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

சச்சின் பைலட் நேற்று கூறியதாவது:

ராகுலின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை பொறுக்க முடியாமல், அதை முறியடிக்க பா.ஜ.,வினர் பல்வேறு வகையிலும் முயற்சிக்கின்றனர். அதற்காக பலரை துாண்டி விடுகின்றனர். என்ன முயற்சித்தாலும் ராஜஸ்தானில் ராகுலின் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைக்கும். யாத்திரை வெற்றி பெறுவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-நவ-202211:43:10 IST Report Abuse
duruvasar தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் நீந்துகிறார்கள் என்ற ஸ்டாலினின் முழக்காமா, சச்சின் பைலட்டின் ராகுலின் நடைபயணதிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு என்ற அறிக்கையா இதில் கலப்படமில்லாத பொய் எது என்பதில் மக்களுக்கு குழப்பம் வர வாய்ப்பிருக்கிறது . அடிச்சி விடு அடிச்சி விடு சேகர் பாபு அங்க நிற்கிறார் .
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:05:27 IST Report Abuse
jayvee காங்கிரஸ் ஒற்றுமையின் பலனை இதுதான்.. அடுத்தது அசோக் கெலாட் காலி
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-நவ-202210:27:52 IST Report Abuse
vbs manian யாத்திரை முடிந்ததும் பைலட் முதல் அமைச்சர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X