செஞ்சி-செஞ்சியில் அரசு பள்ளிகளில் நடந்த கலை திருவிழாவை பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி துவக்கி வைத்தார்.
மாணவர்களில் கலை திறனை வெளிக்கொணரவும், ஒற்றுமையை ஏற்படுத்தவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் கலைத் திருவிழா நடத்தி வருகின்றனர்.
அதன்படி, செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலை திருவிழா நடந்தது.
தலைமையாசியர்கள் கணபதி, விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மாணிக்கம், திலகவதி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி விழாவை துவக்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமித்ரா சங்கர், சங்கீதா சுந்தரமூர்த்தி, சங்கர், பொன்னம்பலம், லட்சுமி வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.