அறிவியல் ஆயிரம்
நிலவை தொட்ட முதல் விண்கலம்
நிலவில் மீண்டும் மனிதர்களை தரையிறக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய விண்கலம் வைகிங் - 1. இதனுடன் ஆர்பிட்டர், லேண்டர் அனுப்பப்பட்டது. 1975 ஆக. 20ல் நாசா இதை டைட்டன் ராக்கெட்டில் நிலவுக்கு அனுப்பியது. 1976 ஜூலை 20ல் லேண்டர் (வைகிங் - 1) நிலவில் தரையிறங்கியது. ஆர்பிட்டர் 1846 நாட்களும், லேண்டர் 2307 நாட்களும் பயன்பாட்டில் இருந்தன. இச்சாதனையை 2003ல் நாசா அனுப்பிய ஆப்பர்சூனிட்டி ரோவர் (14 ஆண்டு, 47 நாட்கள்) முறியடித்தது.
தகவல் சுரங்கம்
அக்மார்க் பெயர் காரணம்
இந்தியாவில் விவசாய பொருட்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் குறியீடு 'அக்மார்க்' என அழைக்கப்படுகிறது. 'அக்' என்றால் அக்ரிகல்சர். 'மார்க்' என்றால் சான்றிதழ் என பொருள். 1934 - 1941ல் இந்தியாவின் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் ஆலோசகராக இருந்த ஆர்ச்சிபால்டு மெக்டொனால்டின் பெயர் சுருக்கமே அக்மார்க். தலைமையகம் ஹரியானாவின் பரிதாபாத். தவிர சென்னை, கொச்சி, மும்பை, கோல்கட்டா உட்பட 11 மண்டல ஆய்வகங்கள் உள்ளன. பருப்பு, எண்ணெய், பழங்கள், காய்கறிகளை சோதனை செய்து 'அக்மார்க்' முத்திரை வழங்கப்படுகிறது.